விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் ஆம்னி பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு.
தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஞ்சர் ஆனதால் ஓட்டுநர் சித்தையன், லாரியை ஓரமாக நிறுத்தி டயரினை மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்னால் அதி வேகமாக மோதியது. தொடர்ந்து, அதே வேகத்தில் பின்னால் வந்த கார் ஆம்னி பேருந்தின் பின்னால் மோதியது. இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநர் சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அண்மைச் செய்தி: ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில்… எச்சரிக்கும் கி.வீரமணி
மேலும் ஆம்னி பேருந்து மற்றும் காரில் பயணம் செய்த பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








