ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில்… எச்சரிக்கும் கி.வீரமணி

தன்னை கருப்பு திராவிடன் எனக்கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியில் திராவிடர்…

தன்னை கருப்பு திராவிடன் எனக்கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு இடையூறு செய்யும் ஆளுநரின் சூழ்ச்சியை மக்களிடம் தெரிவிக்க விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

அண்மைச் செய்தி: ‘7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி’

தொடர்ந்து பேசிய அவர், கருப்பு திராவிடன் எனக்கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவர் கட்சிக்குள் உள்ள பிரச்னைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் என விமர்சித்தார். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் அண்ணாமலை, வெறும் சொல்லால் அல்லாமல் கொள்கையால் கருப்பு திராவிடன் என்பதை உணர்த்த வேண்டும் என கி.வீரமணி சாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.