முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிவசங்கர் பாபா மீது மாணவியின் தாய் பாலியல் புகார்: மேலும் 2 வழக்குகள் பதிவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி பள்ளியில் படித்த
மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாகப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா
சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து
வருகிறார். அவர் இப்போது அளித்த பாலியல் புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பெங்களூருவை சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது

Advertisement:
SHARE

Related posts

அசையா சொத்துகளை விற்க ஏர் இந்தியா முடிவு!

கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம்! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Jayapriya

ஷமி – பும்ராவின் அதிரடி ஆட்டம்; இந்திய அணி அபார வெற்றி

Saravana Kumar