முக்கியச் செய்திகள் தமிழகம்

பொது சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு உகந்தது அல்ல: முதலமைச்சர்

பொது சொத்துக்களை குத்தகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ தேச நலனுக்கு
உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுச் சொத்துக்களை ஒன்றிய அரசு தனியார் மயமாக்குவது தொடர் பாக காங்கிரஸ், இடதுசாரிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அதில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை, ஏழு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஒன்றிய அரசு, 70 ஆண்டுகளாக கட்டிக்காத்த சொத்துக்களை விற்பதற்கு முயற்சி செய்வதாகவும், பாரம்பரியமிக்க சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுச் சொத்துக்களை தனியார்
மயமாக்குவதை திமுக அரசு ஏற்றுக் கொள்ளாது என்றும், ஒன்றிய அரசு மாநில அரசுடன்
கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிலங்களை மாநில அரசுதான் கொடுத்துள்ளதாக கூறிய
தென்னரசு, லாபகரமான தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்பது தேவையற்ற நடவடிக் கை என்றும் இதை திமுக அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுத்துறை நிறுவனங்கள் நமது சொத்து என பெருமிதம் தெரிவித்தார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி

Gayathri Venkatesan

யூடியூபர் மதன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்கவேண்டும்: நீதிமன்றம்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

Ezhilarasan