பிரபல நடிகர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சித்தார்த் சுக்லா (40). ஹம்டி ஷர்மா கே துல்ஹானியா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், ஏராளமான டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இப்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வது சீசனின் வெற்றியாளரான சித்தார்த் சுக்லா, தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்குள்ள ஹூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவர் ரசிகர்களுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்தி சினிமா நடிகர், நடிகைகள் சமூக வலை தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








