தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள, அண்ணா நகர் 3 வது தெருவில் முத்துராமன் – காளியம்மாள்…

தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள, அண்ணா நகர் 3 வது தெருவில் முத்துராமன் – காளியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்ப்பிணியாக உள்ள கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தி அழைத்து வந்து உள்ளனர் முத்துராமன் – காளியம்மாள் தம்பதி.

எதிர்பாராத விதமாக, இன்று அதிகாலை வீடு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், கர்ப்பிணியான கார்த்திகா மற்றும் அவரது தாயார் காளியம்மாவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். இவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அவர்களது உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த 2 பேரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

அண்மைச் செய்தி: ‘இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது நல்ல முதலீடாக இருக்குமா?’

முத்துராமன் – காளியம்மாள் தம்பதி வசித்து வந்த வீடு 50 ஆண்டுகள் பழமையான வீடு என கூறப்படுகிறது. மேலும், கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும், தொடர்ந்து ஈரநிலையில் ஓடுகள் இருந்ததால் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.