அற்புதங்களை கொடுக்கும் அட்சய திருதியை

இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது நல்ல முதலீடாக இருக்குமா? அட்சய திருதியை என்றாலே நம் நினைவுக்கு வருவது தங்க நகைகளும், அதற்கான ஆஃபர்களும் தான். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை…

இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது நல்ல முதலீடாக இருக்குமா?

அட்சய திருதியை என்றாலே நம் நினைவுக்கு வருவது தங்க நகைகளும், அதற்கான ஆஃபர்களும் தான். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையை அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது நல்ல முதலீடாக இருக்குமா? என்ற கேள்வியும் பலரின் மனதிலும் எழுகிறது. நிச்சயம் அது நல்ல முதலீடாக இருக்கும் என்கின்றனர் ஆலோசனையாளர்கள். மேலும், கடந்த அட்சய திருதியை முதல், சுமார் 8% வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தங்கநகை கடைகளிலும் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி வாடிக்கையாளர்களை வரவேற்க காத்திருக்கின்றனர் தங்கநகை கடை உரிமையாளர்கள். அட்சய திருதியை இந்த ஆண்டு மே 3-ஆம் தேதி காலை 5.18 மணிக்குத் தொடங்கி, மே 4-ஆம் தேதி காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘மீண்டும் அதிர்வலைகளை கிளப்பும் சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு வழக்கு’

தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என சொல்லப்படும் இந்த சூழ்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது கடந்த 10 ஆண்டுகால அட்சய திருதியை ஒப்பிடும்போது 15,000-லிருந்து சுமார் 50,000-யை எட்டியுள்ளது என சொல்லப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதால் 5% முதல் 10% வரையில் சேமிக்க முடியும் என்கின்றனர் தங்க மதிப்பீட்டாளர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.