இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த…

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்திலேயே தங்கியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்டு மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வரும் 20ம் தேதி பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவருக்கும் அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு வீரர் தொற்றில் இருந்து குணமடைந்தது நெகட்டிவ் முடிவு வந்ததாகவும், மற்றொரு வீரர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடர் தொடங்க இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில், இருவரும் விரைவில் அணியுடன் இணைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.