முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆஷஷ் டெஸ்ட்: இங்கிலாந்து வேகம் ஆண்டர்சனுக்கு முதல் போட்டியில் ஓய்வு

ஆஷஷ் டெஸ்ட் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முதல் டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மிகவும் பிரபலமான இந்த ஆஷஷ் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நாளை (8-12-2021) தொடங்குகிறது. இதில், இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன், பாலியல் புகார் காரணமாக சமீபத்தில் பதவி விலகியதால், புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முதல் டெஸ்ட் போட்டியில், ஓய்வளிக்கப்பட்டிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

‘அவருக்கு காயம் ஏதும் இல்லை. நேற்றுவரை நன்றாகவே முழுத் திறனுடன் பந்துவீசினார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருப்பதால் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடிலெய்டில் நடக்கும் 2 வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்

Halley Karthik

மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!

Jayapriya

கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் தடுப்பூசி! உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!!

Ezhilarasan