ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

பாலக்கோடு அருகே ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் ஆன்லைன் வழியாக…

பாலக்கோடு அருகே ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் ஆன்லைன்
வழியாக கூகுள் பே, போன் பே, பேடி எம் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு
இளைஞர்கள், கல்லூரி மாணவர்ளுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட
எஸ்.பி. கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தருமபுரி மது விலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையிலான போலீசார் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் தொடர் தேடுதல்
வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது, அனுமந்தபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாகச் சென்றனர். இதையடுத்து அவர்களை துரத்திச் சென்ற போலீசார் பாலக்கோடு அருகே ஆரதஅள்ளி கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ
கஞ்சா பொட்டலம் பிடிபட்டது.

அதைத்தொடர்ந்து, அவர்களை விசாரித்ததில் காரிமங்கலம் அருகே ஆலமுரசுப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (40), வையாலி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.