முக்கியச் செய்திகள் தமிழகம்

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவர் கைது

இந்திய உணவு கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்த தனியார் சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் சென்னை காவல்
ஆணையரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம்
மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் ரூ.88
லட்சத்திற்கு மேல் பணத்தை வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொண்டு, வேலை
வாங்கித்தராமலும், பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கோரி குறிப்பிட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் தனியார் சட்டக்கல்லூரியில் உபேராசிரியராக பணிபுரியும் சாந்தி மற்றும் பக்தவச்சலம் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் இந்திய உணவு கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி சுமார் 17 நபர்களிடமிருந்து ரூ.88 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்று கொண்டு, மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் யாரும். இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற
வேண்டாம். மேலும் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வழங்குவதில்லை. வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும், வேலைக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்புக்கொண்டுவிண்ணப்பிக்ககூடிய வேலைக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை

Web Editor

குடியரசு தலைவர் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்

G SaravanaKumar

தடுப்பூசி தட்டுபாடு இல்லை: உதயநிதி ஸ்டாலின்

Halley Karthik