மீனவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவேண்டும்

மீனவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம்…

மீனவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 92 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டிருப்பதாக கூறினார்.

 

72 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், மீனவ கிராமங்களில் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் இன்மை உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், மீனவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் கூட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் அழைத்து வர வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.