முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

காதலுக்கு உதவி கேட்ட இளைஞருக்கு புனே காவல் ஆணையரின் சாமர்த்திய பதில்!

ட்விட்டரில் காதலுக்கு உதவுமாறு கேட்ட இளைஞருக்கு, புனே காவல் ஆணையர் சாமர்த்தியமாக அளித்த பதில் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றுள்ளது.

புனே நகர காவல்துறை, ஒரு பிரத்தியேக குழு அமைத்து மக்களின் குறைகள் மற்றும் பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறது. அதன்படி, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் நிகழும் சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் அதன் தொடர்பான பிரச்னைகளை கண்காணிக்க உதவும் ஒரு புதிய முயர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.

இணையத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் இடையே எழும் பிரச்னைகளை காவல்துறையினர் கேட்டறிந்து அதனை தீர்த்து வருவது, மக்கள் மத்தியில் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா, கடந்த திங்களன்று ட்விட்டரில் நேரலை வாயிலாக மக்களிடம் உரையாற்றினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது, ஒரு இளைஞர் அமிதாப் குப்தாவிடம், தான் தனது பெண் தோழியை காதலித்து வருவதாகவும், தன் காதலை அவர் ஒப்புக்கொள்ள ஏதேனும் உதவி செய்யுங்கள் என்றும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமிதாப் குப்தா, அந்த பெண் சம்மதம் இன்றி நாம் எதுவும் செய்யமுடியாது எனக் கூறினார். அதேபோல் நீங்களும் அவர் விருப்பத்திற்கு மாறக எந்தொரு தவறான செயலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்திய அவர், ஒருவேளை உங்கள் காதலுக்கு அவர் சம்மதம் தெரிவித்தால், எனது வாழ்த்துகளும் ஆசிர்வாததமும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் எனத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

”2021-ல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்”- அண்ணாமலை!

Jayapriya

தொடர்ந்து தோல்வி.. சன் ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் அதிரடி நீக்கம்!

Karthick

“மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை” – ப.சிதம்பரம்

Ezhilarasan