கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் 10,000 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த ஏப்ரல் -2020 முதல் பிப்- 2021 வரை மொத்தமாக 10,113 நிறுவனங்களும் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்த நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்,“கடந்த 2020 -21 நிதியாண்டில் மொத்தம் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒவ்வொரு மாநிலத்திடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

டெல்லியில் 2,394, உத்தரப் பிரதேசத்தில் 1,936, தமிழகத்தில் 1,322, மகாராஷ்டிராவில் 1,279, கர்நாடகாவில் 836, சண்டிகரில் 501, ராஜஸ்தானில் 479, தெலுங்கானாவில் 404, கேரளம் 307, ஜார்கண்ட் 137, மத்தியப் பிரதேசத்தில் 111, பீகார் 104, மேகாலயாவில் 88, ஒடிசாவில் 78, சத்தீஸ்கரில் 47, கோவா 36, புதுச்சேரி 31, குஜராத் 17, மேற்கு வங்கத்தில் 4, அந்தமான் நிகோபர் 2 என மொத்தம் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.