நைஜீரிய ஊடகங்கள் டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
நைஜீரிய அதிபரின் பதிவை நீக்கியதால், அந்நாட்டில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஊடகங்கள் டுவிட்டர் தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என நைஜீரிய அரசு அறிவுறுத்தியது. எனினும், அந்நாட்டில், டுவிட்டருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் தகவல்களைச் சேகரிக்க ட்விட்டரைப் பயன்படுத்தக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனுடன், ஊடகங்கள் தங்களது டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் எனவும் நைஜீரிய அரசு ஆணையிட்டுள்ளது.







