ட்விட்டர் ஹேக்: டிஜிபியிடம் குஷ்பு புகார்

ஹேக் செய்யப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தில், இ-மெயில் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வந்த பாஜகவை சேர்ந்த குஷ்பு கடந்த…

ஹேக் செய்யப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தில், இ-மெயில் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வந்த பாஜகவை சேர்ந்த குஷ்பு கடந்த சில நாட்களாக எந்த வித பதிவுகளையும் பதிவிடவில்லை. அவரது பெயர் BRIANN என மாற்றப்பட்டது. இந்த சூழலில், தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து தற்போது சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்த நடிகை குஷ்பு, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கடந்த 4 நாட்களாக தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் தவறான முறையில் பயன்படுத்த கூடாது என்பதற்காகவே புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் தளத்தில் தீவிரமாக இயங்கும் நபர்களின் சமூக வலைத்தளங்களின் பக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு வருவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.