“தவெக ஆட்சி திகில் திரைப்படம் போல இருக்கிறது” – கனிமொழி விமர்சனம்!

சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையை தவெக நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு தெரியாமல் தண்ணிச்சையாக திறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, அணையை திறந்து விட்ட தவெகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழி, தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல!

தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.