#TVKMaanadu | தவெக தலைவர் விஐய்க்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய்க்கு நடிகர், நடிகைகள் சமுக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த…

vijay speech, TVK Vijay, TVK Maanadu, Thalapathy Vijay

தவெக தலைவர் விஜய்க்கு நடிகர், நடிகைகள் சமுக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரிமோட் மூலம் மேடையில் இருந்தே 100 அடிக் கம்பத்தில் கொடியேற்றினார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர் அரசியல், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். பெண்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டு இயங்கும் ஒரே கட்சி தவெக தான் எனவும் தெரிவித்தார்.

பேச்சுக்கு நடுவே பல கட்சிகளையும் மறைமுகமாக சாடினார். பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என முதல் மாநாட்டிலேயே அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் இருக்கும் இந்த காலகட்டத்தில், என்ன காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். தனது முதல் மாநாட்டில் கிட்டதட்ட 45 நிமிடங்கள் பேசினார்.

இதையும் படியுங்கள் : France பெண்ணை மணந்த தேனி இளைஞர் | தமிழ் முறைப்படி நடந்த திருமணம்!

தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நடிகர், நடிகைகள் சமுக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவி : “திரைத்துறையில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா”

நடிகர் சிவகார்த்திகேயன் : “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்”

நடிகர் பிரபு : “விஜய்க்கு முழு ஆதரவு; அவர் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன். விஜய் நல்ல பாதையில் செல்வார் என நம்பிக்கை உள்ளது”

நடிகை ரெஜினா கசாண்ட்ரா: “நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். விஜய் வெற்றிகரமான நடிகர் அவர் வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார்”

நடிகை தன்ஷிகா : தமிழக வெற்றிக்கழகம் மாற்றத்தை எதிர்பார்த்து வாழ்த்துகிறோம். வெற்றி பெற விஜய்க்கு வாழ்த்துகள்.

நடிகர் சிபி : விஜய்யின் புதிய பயணம் அவருக்கு வெற்றியை தரட்டும்.

மேலும் நடிகர்கள் சாந்தனு, சதீஷ், அர்ஜுன் தாஸ், வசந்த ரவி, டைரக்டர்கள் வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ். நெல்சன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.