#TVK கொடி அறிமுகம்… மும்முரமாக நடைபெறும் பணிகள்!

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக கொடி அறிமுக விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய் கடந்த…

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக கொடி அறிமுக விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியதிலிருந்து, கட்சியின் கொடி அறிமுகத்திற்காக அவரின் ரசிகர்களான தொண்டர்கள் ஆவலாக காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் கட்சி கொடி நாளை அறிமுகமாகும் எனவும் விஜயே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நாளை கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவரது கையால் 33 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி அறிமுகம் செய்ய உள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில்
நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

சரியாக காலை 9.15 முதல் 9.30க்குள் விஜய் கொடியை ஏற்ற உள்ளார். இதனை பார்ப்பதற்கு LED டிவி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொடி அறிமுக விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கவும்  திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.