பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழகா வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவருக்கு பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் மலர் தூவி ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயிகள் எப்போதும் என்னை சந்தித்து பேசலாம், விவசாயிகளின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.







