“தவெக அரசு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது!” – உதயநிதி ஸ்டாலின்

கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பெயர்களை மாற்றி அறிவித்துள்ளனர், வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அபோது அவர் கூறியதாவது,

“ தவெக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது, காவிரி, குருவை சாகுபடி உள்ளிட்ட விவகாரங்களில் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தான் கருப்பு உடை அணிந்து வந்தோம். நேற்று போல் தான் இன்றைக்கும் இந்த பட்ஜெட் உள்ளது

கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தான், பெயர்களை மாற்றி அறிவித்துள்ளார்கள். வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார். இந்த அரசு பயிர்கடனை முழுமையாக் அதள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி விவகரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கும் வழக்கம் போல் முதலமைச்சரின் வாயை திறந்து பேசவில்லை.

விவசாயிகள் பிரச்னை குறித்து அவையில் பேச வேண்டும் என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்; அப்போது இது குறித்து விரிவாக பல்வேறு கேள்விகளை எழுப்புவோம்; அதற்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என விவசாயிகள் மாதிரி நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.