முக்கியச் செய்திகள் குற்றம்

சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!

சின்னத்திரை நடிகை சித்ராவை த உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்-தை போலீசார் கைது செய்தனர்.

சென்னையையடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ம் தேதி அதிகாலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில்  மர்மம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தார் புகார் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சித்ரா உயிரிழப்பு செய்துதான் இறந்தார் என்பது உறுதியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சித்ராவுக்கும் – ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில், ஜனவரி மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்ததாக கணவர் ஹேம்நாத் போலீசாரிடம் கூறியுள்ளார். நடிகை சித்ரா மரணம்  தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் 5 நாட்கள் போலீசார் விசராணை நடத்தி வந்தனர். திருமணமான சில நாட்களிலேயே சித்ரா உயிரிழப்பு செய்து கொண்டதால் அவரது மரணம் குறித்து விசாரிக்க ஆர்டிஓவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஹேம்நாத்திடம் நேற்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து சித்ராவின் தாய் விஜயா, மற்றும் தந்தை காமராஜ், சகோதரி சரஸ்வதி ஆகியோரிடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாயர் விஜயா சம்பவத்தன்று வழக்கம் போல் அவரிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கும் அவருடைய மகளான சித்ராவிற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும் சித்ராவின் உயிரிழப்புக்கு ஹேம்நாத் மட்டுமே காரணம் என்பதையும் சித்ராவின் தாயர் விஜயா கூறினார்.

இந்த நிலையில், அடிக்கடி ஹேம்நாத் சண்டையிடுவது குறித்து சித்ரா அவரது தந்தையிடம் செல்போனில் பேசிய ஆதாரம் காவல்துறையினருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சித்ராவை உயிரிழப்புக்கு தூண்டியதாக
கணவர் ஹேம்நாத்தை நள்ளிரவில் நசரத்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, ஹேம்நாத்தை பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு

Arivazhagan Chinnasamy

திமுக-வினருக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு

Dinesh A

ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதாகிருஷ்ணன் விளக்கம்

EZHILARASAN D

Leave a Reply