“விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி

விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி மையமாக விரைவில் இந்தியா திகழும் என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விண்வெளிதுறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி,…

விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி மையமாக விரைவில் இந்தியா திகழும் என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விண்வெளிதுறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, தகவல் தொடர்பு துறையில் இந்தியா வியத்தகு முன்னேற்றம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ பலநாடுகளின் செயற்கை கோள்களை குறைந்த செலவில் விண்ணில் திறம்பட செலுத்தி வருவதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விரைவில் விண்வெளித்துறையின் உற்பத்தி மையமாக இந்தியா திகழும் எனவும் நம்பிக்கை தெரிவித்த அவர், விண்வெளித்துறையில் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதன் வாயிலாக, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா விரைவில் விண்வெளி சாதனங்களின் உற்பத்தி மையமாக மாறும் என்றும், இந்தத் துறையில் தனியார் முதலீடு செய்வது ஹைடெக் வேலைகளை உருவாக்க வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply