முக்கியச் செய்திகள் இந்தியா

ஆட்சேபனைக்கு உரிய பதிவுகள் நீக்கம்: கூகுள், முகநூலுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

ஆட்சேபனைக்கு உரிய பதிவுகளை நீக்கிய கூகுள், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் மே 15 ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை முகநூலில் பதிவிடப்பட்டிருந்த ஆட்சேபனைக்கு உரிய 3 கோடி பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டிருந்த 20 லட்சம் ஆட்சேபனைக்கு உரிய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
தேடு பொறியான கூகுள் நிறுவனம் யூடியூப் உட்பட ஆட்சேபனைக்கு உரிய 59,350 பதிவுகளுக்கான லிங்குகளை அகற்றியிருகிறது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கூகுள், “முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் புதிய தொழில்நுட்ப சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதை முக்கியத்துவம் வாய்ந்த தாக பார்க்கின்றேன். புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நீக்கப்பட்ட பதிவுகள் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஏற்ப தகவல் வெளியிடப்பட்டிருப்பது வெளிப்படைதன்மையை நோக்கிய பெரும் முன்னெடுப்பு,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டர் நிறுவனம் இன்னும் இதுபோன்று ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்கிய விவரத்தை இன்னும் வெளியிடவில்லை. எனவே மத்திய அமைச்சரின் இருந்த கருத்து காரணமாக டிவிட்டர் நிறுவனமும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்த பிறகு டிவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக டெல்லி, மத்திய பிரதேசத்தில் தலா ஒரு வழக்கும், உத்தரபிரதேசத்தில் இரண்டும் வழக்கும் என நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம்: புதிய காப்பீடு அறிமுகம்!

Ezhilarasan

கொட்டித் தீர்த்த கன மழை! வெள்ளத்தில் மிதந்த மும்பை!!

Ezhilarasan

ஆற்றில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

Halley karthi