துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த மக்களை மீட்பதற்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 6-வது விமானம் துருக்கி சென்றடைந்தது.
துருக்கியின் காஷியாண்டெப் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தெடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கி நகரமே உருக்குலைந்து போனது. இதுவரை இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் 12,391 மக்கள் இறந்துள்ளனர். சிரியாவில் 2992 பேர் இந்த நிலநடுக்கதால் இறந்துள்ளனர். ஆனாலும் இருநாட்டிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
பல்வேறு நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகின்றன. ‘ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட அன்றே இந்தியா தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்பியது. தற்போது 6-வது விமானத்தை இந்தியா துருக்கிக்கு அனுப்பியது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 6-வது விமானம் துருக்கிக்கு சென்றடைந்தது. இந்த விமானத்தில் மீட்பு படையினர், அத்யாவசிய பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.







