இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, அஸ்வின் சுழல் ஜாலத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஜடேஜா குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். சூர்யகுமார் மற்றும் பரத் இன்றைய போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆரம்பம் முதலே இந்திய அணி பந்து வீச்சில் அசத்தியது. தொடக்க ஆட்டக் காரர்கள் கவாஜா விக்கெட்டை சிராஜ், வார்னர் விக்கெட்டை ஷமி வீழ்த்தினர். அதன் பிறகு மார்னஸ் லபுஷேங், ஸ்டீவ் ஸ்மித் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். மார்னஸ் 49 ரன்கள் அடித்திருந்த போது, அவரது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப், அலெக்ஸ் கேரி ஆகியோர் சற்று நிதானமாக ஆடி ரன் சேர்த்தாலும், அவர்களின் விக்கெட்களையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தினர்.
இதன் மூலம் ஆஸ்திரலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும், சிராஜ் மற்றும் ஷமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா மிரட்டலான கம்பேக் கொடுத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 11 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சற்று முன்பு இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
-ம.பவித்ரா