துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!

மத்திய கிழக்கு நாடான துருக்கி இனி ‘துருக்கியே (Türkiye)’ என அழைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ரெசிப் டயிப் எர்டோகன் தலமையிலான அரசு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி…

மத்திய கிழக்கு நாடான துருக்கி இனி ‘துருக்கியே (Türkiye)’ என அழைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ரெசிப் டயிப் எர்டோகன் தலமையிலான அரசு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டை மறுபெயரிடுவதற்கும், பறவை, மற்றும் அதனுடன் தொடர்புடைய சில எதிர்மறை அர்த்தங்களிலிருந்து அதன் பெயரைப் பிரிப்பதற்கும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. துருக்கி அனுப்பிய கடிதத்தை பெற்றுக் கொண்டோம் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார். மேலும், அந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றதிலிருந்து அதன் பெயர் மாற்றப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 1923ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பிறகு, துருக்கியே என்றே  துருக்கி அழைக்கப்பட்டது. எனினும், துருக்கி என்று நிலைத்துவிட்டது.

துருக்கி மொழியில் துருக்கியே என்றே உச்சரிக்கப்பட வேண்டும். நாட்டின் பெயரை மாற்றுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிபர் எர்டோகன் உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படியுங்கள்: மத சுதந்திரம் – அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

இந்தப் பெயரை துருக்கியின் கலாசாரத்தையும், மதிப்புகளையும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். துருக்கியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலும் துருக்கியில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு பதிலாக துருக்கியேவில் தயாரிக்கப்பட்டது என்று இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து “துருக்கியே” என்றே அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது. முன்னதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் “ஹலோ துருக்கியே” என்று கூறும் வீடியோவையும் அந்நாட்டு அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் அகராதியில், துருக்கி என்பது “மோசமாக தோல்வியுற்ற ஒன்று” அல்லது “ஒரு முட்டாள் அல்லது முட்டாள்தனமான நபர்” என அர்த்தம் தருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.