கொந்தளிக்கும் மாண்டஸ்; தத்தளிக்கும் மீனவர்கள்…

மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்த நிலையில் கடல் அலைகள் சீறி கொந்தளித்து  கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் கடல் நீரால்  இழுத்துச் செல்லப்படுகிறது. வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து,…

மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்த நிலையில் கடல் அலைகள் சீறி கொந்தளித்து  கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் கடல் நீரால்  இழுத்துச் செல்லப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இந்நிலையில் மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தைச் சுற்றிய பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும் போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் கடல் அலைகள் சீறி கொந்தளித்து வருகிறது.  இதனால் கரை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் கடல் நீரால் சூழ்ந்து இழுத்துச் செல்லும் செல்லப்படுகிறது.

அனைத்து புயல் காலங்களிலும் மீனவர்கள் இது போன்ற பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப் படுவதாகவும்தெரிவிக்கின்றனர். மேலும் மீனவர்களின் விசை படகுகளை பத்திரமாக நிறுத்திவைப்பதற்கு போதிய வசதியின்றி தவித்து வருகின்றனர்.

எனவே இது போன்ற புயல் காலங்களிலும் மழை காலங்களிலும் மீனவர்களின் விசை படகுகளை பத்திரமாகப் பாதுகாக்கும் வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவகையிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள்கோரிக்கை எடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.