மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

தமிழக முதல்வராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சி…

தமிழக முதல்வராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கிறார்.ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் எளிமையாகப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில் ‘தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.