காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து…!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ் நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பளூதூக்குதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.