இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, அணியில் பெரிய மாற்றங்களை செய்யப்போவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து இரண்டாவதாக பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் எனவும், அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் கூறியிருந்தார்.
மேலும் இந்திய அணியின் டாப் ஆர்டரில் உள்ள முதன்மை பேட்டிங் வீரர்கள் சொதப்பிய நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டம், படுதோல்வியிலிருந்து டீசண்டான முறையில் தப்பிக்க உதவியதாகவும் கூறினார்.
இந்நிலையில் இந்திய அணியின் நிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:
எஙகள் அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்டது. குறிப்பாக பந்து வீச்சில்தான் அதிக இளம் வீரர்கள் உள்ளனர். கடந்த டி20 உலககோப்பையில் இங்கிலாந்திடம் அரையிறுதியில் நாங்கள் தோற்றோம். இளம் வீரர்களை கொண்டு விளையாடுவதாலையே இப்படி தோல்விகளை சந்திக்க நேரிடுகிறது. அணியில் உள்ள இளைஞர்கள் சில அனுபவங்களைப் பெறுவதால், பொறுமையாக இருக்க வேண்டும். தவறுகளில் இருந்துதான் படம் கற்றுக்கொள்ள முடியும்.
அவர்கள் அனைவருமே கடுமையாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவ முயற்சிக்கிறோம். அவர்களின் திறமையில் இருந்து சிறந்ததை பெறுவதற்கு சரியான சூழலை உருவாக்கி வருகின்றோம்.
ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை மையமாக கொண்டு குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் நிறைய இளம் வீரர்களை முயற்சித்து பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இவ்வாறு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பேசியுள்ள நிலையில், இனி வரும் காலங்களில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றவர்களுக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் இருக்காது என்பதை ராகுல் டிராவிட் மறைமுகமாக கூறியிருப்பதாக அவரது பேட்டி நமக்கு உணர்த்துவது போல் உள்ளது.