மறைந்த தனது மனைவியின் நினைவாக அவரது உருவத்தோற்றம் கொண்ட சிலிக்கான் சிலையை கணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
கொல்கத்தாவின் கைகாலி பகுதியில் வசித்து வருபவர் தபஸ் சாண்டில்யா. இவரது மனைவி இந்திராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தனது மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தவித்து வந்த தபஸ் சாண்டில்யா, ரூ.2.5 லட்சம் செலவில், இந்திராணியின் முழு உருவ சிலிக்கான் சிலையை உருவாக்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தபஸ் சாண்டில்யா தனது மனைவியின் சிலைக்கு, நாள்தோறும் புடவை கட்டி, நகைகள் அணிவித்து, பராமரித்து வருகிறார். இதுகுறித்து பேசிய சாண்டில்யா, “பத்து வருடங்களுக்கு முன் நானும், எனது மனைவியும் ஒரு கோயிலுக்கு சென்றோம். அங்குள்ள சிலைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். அப்போது என் மனைவி, எனக்கு முன்பாக அவள் இறந்துவிட்டாள், அவளுக்கும் அந்த கோயிலில் இருப்பதைப் போன்று சிலை வைக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தாள். அவளது விருப்பத்தை இன்று நான் நிறைவேற்றியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
தபஸ் சாண்டில்யா தன் மனைவி மீது கொண்டுள்ள அன்பும், அவர் தனது மனைவியின் முழு உருவ சிலையுடன் ஒன்றாக அமர்ந்திருப்பது, தலைவாரி பராமரிப்பது போன்ற புகைப்படங்களும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.