அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் அண்மையில் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். இச்சம்பவம் தொடர்பாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் தாமஸ் ஆலன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர் டிரம்பின் மனைவி மெலானியாவை விதவை என்று குறிப்பட்டது பூதாகரமாக வெடித்துள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன் ஒளிப்பரப்பான இந்த இரவு நேர நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், நகைச்சுவை பேச்சில் அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பை கர்ப்பிணி விதவை போல உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனங்களை தெரிவித்துளார்.
இந்த நிலையில் ஜிம்மி கிம்மலை பணி நீக்கம் செய்யுமாறு தனியார் தொலைக்காட்சியை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் வலைதளப்பதிவில் “கிம்மலின் வன்முறைக்கான இழிவான அழைப்பால் பலரும் கொதிப்படைந்திருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். பொதுவாக அவர் சொன்ன எதற்கும் அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். ஆனால், இது வரம்பு மீறிய செயல். ஜிம்மி கிம்மலை டிஸ்னி மற்றும் ஏபிசி உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்,” என்று கூறியுள்ளார்.




