தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூரிலிருந்து சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரியும் – தூத்துக்குடியிலிருந்து காற்றாலை ஏற்றிச் செல்லக்கூடிய லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில், தீயில் கருகி இருவர் உயிரிழந்த நிலையில், அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்த தீயணைப்புத் துறையினர், மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அப்பகுதியில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காற்றாலை ஏற்றிச் சென்ற லாரியில் தீயில் கருகி உயிரிழந்தவர்கள் யார் எனத் தெரியாத நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் உத்திர பிரதேசம் மாநிலம் டிகைடா பகுதியினை சேர்ந்த இந்திராமணிபால் என்பதும், கிளீனர் அதே மாநிலம் பிரதாப்கர் பகுதியினை சேர்ந்த பவன் பட்டேல் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








