சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு – பெண் டிஎஸ்பி அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  சமீபத்தில் யூடியப் சேனல்…

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  சமீபத்தில் யூடியப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.  அதில்,  காவல்துறை அதிகாரிகள் குறித்தும்,  பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.  ஏற்கனவே சவுக்கு சங்கர் மீடியாவில் இருப்பவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து,  அவர் மீது சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  சவுக்கு சங்கரின்  காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் காவலர்களை மிக மிக மோசமாக சித்தரித்துள்ள சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சீன உயிரியல் பூங்காவில் ‘பாண்டா நாய்கள்’ – வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்!

டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  ஆபாசமாக பேசுதல்,  அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்,  பெண்களை இழிவுபடுத்துதல்,  தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.