காவல் துறையினரை தாக்க முயற்சி செய்யும் குற்றவாளிகளுக்கு திருச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு எச்சரிக்கை என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இரண்டு ரவுடிகள் விசாரணைக்காக அழைத்து சென்ற போது தப்பிக்க
முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அவர்கள் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக கர்நாடகா மாறும்- ஜெ.பி.நட்டா
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல்ஆணையர் சத்திய பிரியா,
சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்
உள்ளது. அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். இந்நிலையில் திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.விசாரணைக்காக கைது செய்து குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்லும் பொழுது போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. குற்றவாளிகள் திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில் அதனை மீட்பதற்காக வந்த பொழுது குற்றவாளிகள் போலீசாரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது போன்ற பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கும்
குற்றவாளிகளை கைது செய்து வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் காவல்துறையினரும் தீவிரமாக புலன் விசாரணை செய்கிறார்கள். ஆனால் தங்களது உயிருக்கு தற்காப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களை சுட வேண்டிய சூழல் காவல் துறையினருக்கும் உருவாகிறது.
கஞ்சா போன்ற போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து கைதாகும்
குற்றவாளிகளின் மீது இது போன்ற நடவடிக்கை இருக்குமா என்கிற கேள்விக்கு ? இது
அவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம் என்றார்.