தமிழர்கள் எங்கள் திறமையை அடையாளம் காணவில்லை-தமிழிசை செளந்தரராஜன் வருத்தம்

திறமையானவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர்…

திறமையானவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியாளர்கள் தினம் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாட வேண்டும். மாநிலங்களில் அதை அமல்படுத்த திட்டமிருக்கிறது. ஆளுநர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது என்பது ஜனாதிபதி அவர்களால் உள்துறை அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் எங்களைப் போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கவில்லை.

தமிழர்கள் எங்கள் திறமையை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எங்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கியிருந்தால், நாங்கள் மத்திய மந்திரிகளாக ஆகியிருப்போம். பாராளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் ஆக முடியவில்லை. திறமையாளர்களை வீணடிக்க வேண்டாம் என்பதால் ஆளுநர் ஆக்கப்படுகிறார்கள். எங்கள் மேல் தப்பில்லை. தமிழக மக்களிடம் கேட்பது, நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.