ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடந்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோரிடம், 800 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த, ‘ஹிஜாவு அசோசியேட்’
நிதி நிறுவனத்தின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை, வண்டலுாரை சேர்ந்தவர் சவுந்தரராஜன், இவரது மகன் அலெக்சாண்டர்.
இவர்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமை இடமாக வைத்து, ஹிஜாவு அசோசியேட் பி.லிட்., என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள் மேலும், ஐந்து
நிறுவனங்களை நடத்தினர். இதன் வாயிலாக, எங்கள் நிறுவனத்தில், லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் வட்டியாக 15-20 ஆயிரம் ரூபாய் தரப்படும் என விளம்பரம் செய்தனர். இவர்களை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இந்த பணத்தை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக மோசடி
செய்துள்ளனர். முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்ய, மாநிலம் முழுவதும் ‘ஏஜன்ட்கள்’ மற்றும் பொது மேலாளர்கள், மேலாளர்கள் என ஆட்களை நியமித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2022 டிசம்பரில் ஹிஜாவு அசோசியேட் பி.லிட்., மற்றும் அதன் கிளை நிறுவனங்கள், இயக்குனர், நிர்வாக இயக்குனர் பொது மேலாளர் வீடு, அலுவலகம் என 32 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில், ஹிஜாவு நிறுவனத்தில் முக்கிய ஏஜென்டாக செயல்பட்ட, சென்னை, பெரம்பூர், பெரியார் நகரைச் சேர்ந்த நேரு உட்பட் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக, ஹிஜாவு அசோசியேட் பி.லிட்., மற்றும் அதன் கிளை நிறுவனங்களில், மேலாளர், குழு உறுப்பினர்கள் என முக்கிய
பொறுப்புகளில் இருந்த சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சாந்தி கைது
செய்யப்பட்டு உள்ளார்.
அதேபோல, விருகம்பாக்கம் கல்யாணி, அண்ணா நகர் சுஜாதா ஆகியோரும் கைது
செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் மோசடி நிறுவனத்திற்கு 2,835
முதலீட்டாளர்களிடம் இருந்து 235 கோடி ரூபாய் பணம் வசூலித்து கொடுத்தது
தெரியவந்துள்ளது. இவர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடந்துள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட
நிலையில் சரணடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்ட ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 21 இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது நிலையில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் சரண் அடைந்துள்ளார். சரணடைந்த ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜனை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா