கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை

லடாக் பகுதியில் பைக் ரைடு சென்றுள்ள நடிகர் அஜித்குமார் கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.   நடிகர் அஜித்குமாரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகி…

லடாக் பகுதியில் பைக் ரைடு சென்றுள்ள நடிகர் அஜித்குமார் கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் அஜித்குமாரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். அதிரடி கலந்த ஆக் ஷன் படமாக ஏகே-61 உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில், படப்பிடிப்புகளுக்கு நடுவே நடிகர் அஜித்குமார் தனக்கு பிடித்தமான பைக் ரைடிலும் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், அஜித்தின் ஏகே-61 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதால், படக்குழுவினருடன் அஜித் ஜாலியாக பைக் ரைடு சென்றுள்ளார்.

லடாக் பகுதியில் அஜித், மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினர் சுற்றி வரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் லடாக்கில் உள்ள ஆற்றங்கரை, கரடு முரடான பாதைகளில் அஜித் பைக்கில் செல்லும் வீடியோ காட்சிகள் பரவியது. இந்நிலையில், கார்கில் நினைவிடத்தில் அஜித் மரியாதை செலுத்துவது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

 

கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித்துடன் ராணுவ வீரர்கள் சிலர் புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.