முக்கியச் செய்திகள் உலகம்

மத்திய அமைச்சருக்கு குதிரையை பரிசாக வழங்கிய மங்கோலியா குடியரசு தலைவர்

மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு அந்நாட்டின் குடியரசு தலைவர் குதிரையை பரிசாக அளித்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடுகளுடனான மூலோபாய கூட்டுறவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் பயணமாக மங்கோலியா சென்றுள்ளார். மேலும் டோக்கியோவில் நடைபெறும் 2+2 அமைச்சர்கள் மாநாட்டிலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளவுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மங்கோலிய குடியரசு தலைவர் உக்னாகியின் குரேல்சுக்கை சந்தித்து மூலோபாய இருதரப்பு உறவுகள் குறித்து கலந்தாலோசித்தனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், “மங்கோலியாவின் ஜனாதிபதியுடன் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மங்கோலியாவுடனான இந்தியாவின் பன்முக மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “மங்கோலியாவில் உள்ள எங்கள் சிறப்பு நண்பர்களிடமிருந்து ஒரு சிறப்பு பரிசாக குதிரை கிடைத்துள்ளது. இந்த குதிரைக்கு ‘தேஜாஸ்’ என்று பெயரிட்டுள்ளேன். நன்றி, ஜனாதிபதி குரேல்சுக். நன்றி மங்கோலியா என ட்வீட் செய்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!

இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

Web Editor

மாணவர்களுக்கு குட் நியூஸ்: சனிக்கிழமைகளில் இனி பள்ளிகளுக்கு விடுமுறை

Halley Karthik