சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவருக்கு அரசு உடனே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியை சேர்ந்தவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவன் பூவலிங்கம். இவர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 85% மதிப்பெண்கள் எடுத்தும் உயர் கல்வியில் சேரமுடியாமல் தவித்து வருகிறார். காரணாம் பல ஆண்டுகளாக சாதிச்சான்றிதல் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழித்து வருவதே ஆகும்.
மாணவனுக்கு சாதிச்சான்றிதல் வழங்க எந்த ஒரு தடையும் இல்லை என வட்டாட்சியர் பரிந்துரை செய்த பின்னும் அலைகழிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மாணவனின் தாயார், உயர்கல்வி ஆசை முடியாமல் போனால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என தனது மகன் என கூறுவதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார். மேலும் மகனின் எதிர்கால நலன் கருதி, அரசு உடனடியாக தலையிட்டு சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மாணவர் பூவலிங்கத்தின் அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







