ககன்யான் திட்டம் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், 1,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அண்மைச் செய்தி: மதிமுக – தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்வு
இந்த ராக்கெட் ஏவுதளம் அமையும்போது, சிறிய அளவிலான ராக்கெட்டுகள் எளிதாக செலுத்த ஏதுவாக இருக்கும் என குறிப்பிட்ட அவர், குலசேகரபட்டினம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தபடும் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








