மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ தேர்வு

சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில்,…

சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில், அவரின் மகன் துரை வைகோ, தலைமைக் கழகச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம், மேகதாது விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, திருவள்ளூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர், பங்கேற்கவில்லை.

அண்மைச் செய்தி: வெள்ளை அறிக்கை – அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் விதிகளில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மதிமுக பொதுச் செயலாளருக்கு கட்சிப் பணி ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கான அதிகாரத்துடன் அவைத் தலைவர், பொருளாளர், துணை பொதுச்செயலாளர்கள் ஆகியோர் பொதுச் செயலாளருக்கான பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே , தலைமைக்கழகச் செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை வைகோ, ஆனந்தக் கண்ணீர் வடித்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.