முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் : ஜிம்பாப்வேயை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரையன் பென்னட் அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜன்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 13.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.