‘நெட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு – உதவி பேராசிரியர் பணிக்கு 50,145 பேர் தகுதி!

பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. சார்பில் நடத்தப்பட்ட ‘நெட்’ (NET) தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறவும், யு.ஜி.சி., ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதேபோல், பி.எச்டி., மாணவர் சேர்க்கையும், யு.ஜி.சி., நெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

இதனிடையே நடப்பாண்டுக்கான நெட் தேர்வு, ஜூன் 22 முதல் ஜூலை 5 வரை நடைபெற்றது. இதில் 6 லட்சத்து, 7,151 மாணவ-மாணவியர் எழுதினர்; இதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. இதில், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறவும், உதவி பேராசிரியராக பணியாற்றவும், 4,241 பேர் தகுதி பெற்றுள்ளனர். உதவிப் பேராசிரியர் மற்றும் பி.எச்டி., சேர, 45,904 பேர் தகுதி பெற்றுள்ளனர். பி.எச்டி., மாணவர் சேர்க்கைக்கு மட்டும், 97,434 பேர் தகுதி பெற்றுள்ளனர். வினாத்தாள் பிழை காரணமாக, ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு, வரும் செப்., 9, 10ம் தேதிகளில் நடக்கும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.