டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள இந்த கவுன்சில், ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்கு பின் கூடுகிறது.
முன்னதாக, கடந்த 2025 செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் பெரிய மாற்றம் செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும் முடிவு செய்தன. ஜி.எஸ்.டி., 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது.
மேலும் மிக ஆடம்பர பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 40 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன் 5,12,18 மற்றும் 28 சதவீதம் என நான்கு வரி அடுக்குகள் நடைமுறையில் இருந்தன. இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் செப்டம்பர் 12ம் தேதி டில்லியில் நடைபெற உள்ளது.




