தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைத்தது.
தமிழ் நாட்டின் முதலமைச்சராக கடந்த மாதம் 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய், பதவியேற்றார். தொடர்ந்து அவரை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை நடிகர் சிலம்பரசன் சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக புகைப்படங்களுடன் நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “இன்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணன் அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் சேவையில் அவருக்கு வலிமையும், வெற்றியும், இறைவனின் ஆசிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




