சிம்பு வேற லெவல் என்றும், அவர் மட்டுமல்ல அவரது உடல் முழுவதும் நடிக்கும் என்றும் நடிகர் கெளதம் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ஆரி, பிரியா பவானி சங்கர், ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக மேடையில் பாடப்பட்டன. ஏ.ஆர்.ரகுமான் நடனம் ஆடிக்கொண்டே பாடல்கள் பாடி விழா மேடையை கோலாகலமாக்கினார்.
இதையும் படியுங்கள் : சிம்புவின் ’பத்து தல’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கௌதம் கார்த்திக், “பத்து தல எனது திரை வாழ்வில் மிகப் பெரிய படம். கிருஷ்ணா நிறைய கஷ்டங்களை கடந்து வந்துள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆக்ஷன் தான் பலம். சண்டை பயிற்சியாளர் சக்தி சரவணன் பயங்கரமாக உழைத்துள்ளார். சாயிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
எனது கடல் படத்திற்கு ரகுமான் பாடல் போட்டுக்கொடுத்த போது கனவு நனவானது போல் இருந்தது. அதற்கு பிறகு இப்படத்தில் எனக்கு பாடல் கொடுத்துள்ளீர்கள். சிம்பு வேற லெவல் என்று சொல்லலாம். உங்கள் ஆன்மீக பயணம் பற்றி என்னிடம் சொன்னீர்கள் ஆனால் அது எனக்கு புரியவேயில்லை. சிம்புவின் உடல் முழுவதும் நடிக்கும். அதனை பார்த்து நான் மிரண்டு போனேன். இதுபோன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததேயில்லை. இதுபோன்று ஆக வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை” என்று கூறினார்.
இயக்குநர் கிருஷ்ணா பேசுகையில், “பல்வேறு சூழ்நிலை காரணமாக படத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கௌதம் கார்த்திக் சம்மந்தமான காட்சிகள் எடுத்துவிட்டோம். சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்க ஒரு வாரம்தான் இருந்தது. சிம்பு அதற்கு தயாராகி வருகிறார்.
எனக்கு இரண்டு படங்கள் கிடைத்து கைவிட்டு போனது. அதனை தொடர்ந்து ஞானவேல் ராஜாவின் பத்து நிமிடம் அமர்ந்து பேசினேன். இறைவன் அருளால் இந்த படம் இங்கு வந்து நின்றுள்ளது. இந்த ட்ரெய்லரை நேற்று இரவு ரகுமானிடம் கொண்டுபோய் கொடுத்தேன். எனக்கும் சிம்புவுக்கும் இருபது வருட பழக்கம். இப்படத்தில் புது கௌதம் கார்த்திக்கை பார்ப்பீர்கள்” என்று தெரிவித்தார்.