முக்கியச் செய்திகள் தமிழகம்

போதை ஆசாமிகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு திருநங்கைகள் கோரிக்கை!

கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு போதை ஆசாமிகள் சிலர் தினந்தோறும் தொல்லை கொடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறையில் திருநங்கைகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றின் கரையோரம் குடிசை வீடுகள் அமைத்து 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு, போதையில் சிலர் இரவு நேரங்களில் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொடர்ந்து தகராறு மற்றும் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி திருநங்கைகள் மயிலாடுதுறை கோட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

காவிரிக் கரையோரம் தாங்கள் வசித்து வரும் நிலையில் தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு போன்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்தால் பாதுகாப்பாக இருக்க முடியுமென்றும், சமூக விரோதிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறை பாதுகாப்புடன் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மீண்டும் ‘போட்’ ரயில் சேவை

Saravana Kumar

வாட்ஸ் ஆப்பில் தகவல் கொடுத்த 2 மணிநேரத்தில் வீடுதேடி மருந்துகள் வழங்கப்படும்: மருந்து விற்பனையாளர் சங்கம்

Ezhilarasan

சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!

Vandhana