முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,039 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 13 ஆயிரத்து 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 411 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 46 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். 251 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 230 பேருக்கும் சேலத்தில் 191 பேருக்கும் கோவையில் 346 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தைப்பூசம் விழா:அறுபடை வீடுகளில் கோலாகலம்

Niruban Chakkaaravarthi

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 துணை ராணுவப்படையினர் உயிரிழப்பு!

Saravana Kumar

இந்த எண்ணை அழைத்தால் காய்கறி, மளிகை உங்கள் பகுதிக்கு வரும்!